வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (15:42 IST)

ரஜினி, எம்.ஜி,ஆர் பெயரை பயன்படுத்த உரிமை இல்லை. - அமைச்சர் ஜெயகுமார்

எம்.ஜி. ஆரின் பெயரைப் பயன்படுத்த ரஜினிக்கு உரிமை இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று தனது ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாத், ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஒட்டும் போஸ்டர்களில் அர்ஜூன் மூர்த்தி மற்றும் தமிழருவிமணியனின் புகைப்படங்கள் இருக்ககூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், அவரை எம்.ஜி.ஆரில் வள்ளல் ஆட்சியை கொடுக்க வல்லவர் என்று பலரும் கருத்துக் கூறி வந்தனர். அதுமட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி, தன்னால் எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுக்கமுடியும் என்று கூறினார்.

இதுகுறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:  அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி எம்.ஜி. ஆர் இரவலை வாங்கக்கூடாது. எனவும்  எம்.ஜி.ஆரின் பெயரை அதிமுகவைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த உரிமையில்லை எனத் தெரிவித்துள்ளார்.