என் ஓட்டு ரஜினி கட்சிக்கே: பிரபல இயக்குனர் பேட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது அரசியல் வருகை அறிவித்த நாளில் திரையுலகின் அவர்களிடமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்தன என்பது தெரிந்ததே
அந்த வகையில் தற்போது ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எனது ஓட்டு ரஜினிக்கு என்று பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியபோது தலைவர் வந்து பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீண்டும் அவரோடு படம் பண்ணுவேனா என்று எனக்கு தெரியாது. கண்டிப்பாக அவருக்கு நான் ஓட்டுப் போடுவேன். அதற்காக தயாராக இருக்கிறோம்.
தலைவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என அறிவித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜை மேலும் சில திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு தங்களது ஆதரவை பகிரங்கமாக தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது