1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (16:17 IST)

ஓட்டுக்கு 5000 ரூபாய் –அதிமுக மீது தங்க தமிழ்ச்செல்வன் புகார்

நடைபெற இருக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போஸ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோரின் மறைவால் அந்த தொகுதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளன.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதிகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரெட் அலர்ட்டைக் காரணமாக காட்டி தேர்தல் தேதியை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இன்னும் தேர்தல்  தேதியே அறிவிக்கப்படாத நிலையில் முன்னால் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய தினகரன் ஆதரவளாரனுமான தங்க தமிழ்செல்வன் தற்போது ஒரு புதுச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு வெற்றி பெறுவதற்காக ஒரு வாக்குக்கு 5000 ரூபாய் வரைக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியைத் தோற்கடித்து தினகரன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.