ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை எவை?

Last Modified ஞாயிறு, 7 ஜூலை 2019 (06:52 IST)
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் ஆஸ்திரேலிய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனவே இதுவரை முதலிடத்தை கட்டிக்காத்து வந்த ஆஸ்திரேலியா இந்த ஒரு தோல்வியால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது

இந்த நிலையில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் விதியின்படி முதலிடத்தில் உள்ள இந்தியாவும், நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் முதல் அரையிறுதியில் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இந்த தொடரில் இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ஜூலை 11ஆம் தேதி இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த இரு அரையிறுதியிலும் வெற்றி பெறும் அணிகள் ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :