”என்னது? எனக்குதான் மேன் ஆஃப் தி சீரீஸா?”...ஆச்சரியமடைந்த வில்லியம்சனின் வைரல் வீடியோ

Last Updated: திங்கள், 15 ஜூலை 2019 (17:31 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 ஆம் ஆண்டின் ”மேன் ஆஃப் தி சீரீஸ்” விருது குறித்த அறிவிப்பை கேட்டு வில்லியம்சன் ஆச்சரியப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து அணிக்கு எதிராக மோதிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நேற்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ”மேன் ஆஃப் தி சீரீஸ்” விருது வழங்கப்பட்டது. அப்போது அந்த அறிவிப்பை கேட்டவுடன், ”என்னது, எனக்கா விருது?” என்பது போல அவர் ஆச்சரியமாக கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :