1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
  4. i did not come to England for it Rohit Sharma Open Talk

நான் அதற்காக இங்கிலாந்துக்கு வரவில்லை - ரோஹித் சர்மா ’ஓபன் டாக்’

rohit sharma
இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று. இதில் இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு அணிகள் விளையாடி வருகின்றன. நம் இந்திய கிரிக்கெட் அணி கடந்த லீக் சுற்றில் முறை இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியபோதும், நேற்றுக்கு முன்தினம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பராக வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
இந்நிலையில் ஒரே உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி 5 சதம் அடித்த ஒரே வீரர் என்ற உலகச் சாதனையை ரோஹித் படைத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு மற்ற வீரர்களின் பங்களிப்புடன் ரோஹித்தின் அதிரடியான ஆட்டமும் வெற்றிக்கு வழிவகுத்தது. அவரது சாதனைக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அவரது உலகச் சாதனை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது இதுகுறித்து அவர் கூறியதாவது : ‘உண்மையாலும் சாதனை நிகழ்த்த வேண்டி இங்கிலாந்துக்கு வரவில்லை. நன்றாக சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாட வேண்டும்.  அதிக ரன்கள் எடுத்து கோப்பையை வெல்ல வேண்டும்.  இதில் எத்தனை ரன்கள் எடுத்தோம், எத்தனை விக்கெட் வீழ்த்தினோ என்பதல்ல.. கோப்பையை வெல்ல வேண்டும் .’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் .. முன்னாள் பாகிஸ்தான் வீரர் சூசகம்