நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது இங்கிலாந்து!

Last Modified வியாழன், 4 ஜூலை 2019 (06:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 41வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. 306 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு சுருண்டது. இதனால் அந்த அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து: 305/8
50 ஓவர்கள்

பெயர்ஸ்டோ: 106
ஜேஜே ராய்: 60
மோர்கன்: 42
ரூட்: 24

நியூசிலாந்து: 186/10
45 ஓவர்கள்
லாதம்: 57
டெய்லர்: 28
வில்லியம்சன்: 27
நீஷம்: 19

ஆட்டநாயகன்: பெயர்ஸ்டோ

இன்றைய போட்டி: ஆப்கானிஸ்தான் மற்றும் மே.இ.தீவுகள்


இதில் மேலும் படிக்கவும் :