போட்டிக்கு நடுவே ஆடையில்லாமல் ஓடிய ரசிகர்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Last Updated: வியாழன், 4 ஜூலை 2019 (19:21 IST)
நேற்று இங்கிலாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஆடையில்லாமல் ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீடில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங்கில் இறங்கியது. மும்முரமாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களுக்கு 305 ரன்கள் குவித்தன.

அடுத்ததாக களமிறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஓவர்களுக்கு 186 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதனிடையே நேற்று மைதானத்தில் போட்டியின் நடுவே, ரசிகர் ஒருவர் ஆடையில்லாமல் ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மைதானத்தில் ஆடியில்லாமல் ஓடிய அவர், திடீரென பல்டி அடிப்பது, வேடிக்கையாக ஆடுவது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டார். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கட்டுபடுத்த முடியாமல் திணறினர்.

பின்னர் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :