7வது தோல்வி: ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் வெளியேறுமா ஆப்கானிஸ்தான்?

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (07:28 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணி பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுமே லீக் போட்டியில் இன்னும் விளையாட வேண்டிய நிலை இருப்பதால் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் நாடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
நேற்றைய போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி மொத்தம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இன்னும் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரங்கள்
வங்கதேச அணி: 262/7
50 ஓவர்கள்

ரஹிம்: 83
ஷாகிப் அல் ஹசன்: 51
தமிம் இக்பால்: 36
ஹோசைன்: 35

ஆப்கானிஸ்தான்: 200/10
47 ஓவர்கள்

ஷின்வாரி: 49
குல்பதின் நயிப்: 47
ரஹ்மத் ஷா: 24
நஜ்புல்லா: 23
ஆட்டநாயகன்: ஷாகிப் அல் ஹசன்:

இன்றைய போட்டி: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா


இதில் மேலும் படிக்கவும் :