1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 10 years completed India winning the champions trophy

இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு.. தொடரும் சோகம்!

இந்தியா
இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட் அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளில் சொதப்பி வருகிறது. சிறப்பாக விளையாடி நாக் அவுட் போட்டிகள் வரை சென்று அதன் பின்னர் சொதப்பி வெளியேறுகிறது. இந்த சோகம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தோனி தலைமையில் வென்றது. அந்த கோப்பயை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதைப் பகிரும் பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் கோப்பை வெல்லும் கனவு எப்போது நிறைவேறும் என ஏக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்தின் அந்த அனுகுமுறைதான் நாதன் லயனை ஹீரோவாக்கியது- அஸ்வின் கருத்து!