தொடர்புடைய செய்திகள்
- நீட் பயிற்சி வகுப்பு சென்ற 20 வயது மாணவர் தற்கொலை.. ராஜஸ்தானில் சோகம்..!
- வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர்..! செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்..!!
- ஏ.கே.மோட்டார்ஸ் : இளைஞர்களை ஈர்க்கும் அஜித்-ன் முயற்சி
- கேப்டன் மாற்றம் தோனியின் முடிவா? CSK பயிற்சியாளர் பேட்டி
- அதிக பாலோயர்களை கொண்ட ஐபிஎல் அணி ! எது தெரியுமா?
தனது பயோபிக் படத்தை தானே இயக்கி, நடிக்கும் யுவ்ராஜ் சிங்!
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.
ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இப்போது தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் வரிசையாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் யுவ்ராஜ் சிங் தன்னுடைய பயோபிக் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய பயோபிக் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.