வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:30 IST)

ரோஹித், கோலி, தோனி ஆகியோரில் யார் பெஸ்ட்?… யுவ்ராஜ் சிங் சொன்ன பதில்!

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

ஆனால் யுவ்ராஜ் சிங் கேரியர் விரைவில் முடிந்ததற்கு தோனிதான் காரணம் என்று யுவ்ராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடந்த சில ஆண்டுகளாக தோனி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். ஆனால் தன் தந்தை சொல்லும் கருத்துகள் தனக்கு உடன்பாடு இல்லாதவை என யுவ்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “டி 20 கிரிக்கெட்டில் ஒருவீரரைதான் தேர்வு செய்யவேண்டும் என்றால் ரோஹித், கோலி மற்றும் தோனி ஆகியோரில் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “டி 20 கிரிக்கெட் என்றால் நான் ரோஹித்தைதான் தேர்வு செய்வேன். ஏனென்றால் அவரின் அதிரடியான ஆட்டம் எதிரணியை நிலைகுலையச் செய்வது. மேலும் அவர் மிகச்சிறந்த கேப்டன்” எனக் கூறியுள்ளார்.