பிக்பாஸுக்கு போட்டியாக ஜி தமிழ் புதிய நிகழ்ச்சி! களைகட்டும் சின்னத்திரை!
தொலைக்காட்சி சேனல்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியும் அது போன்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாம்.
4 ஆண்டுகளுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட போது அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை யாரும் யோசித்திருக்க முடியாது. அந்தளவுக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலம் ஆக்கியுள்ளது பிக்பாஸ். இதனால் மற்ற போட்டி சேனல்களும் பிக்பாஸ் போல ஏதாவது புதிய நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.அந்த வகையில் ஜி தமிழ் சேனல் ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்து ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது.