1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (07:21 IST)

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

இரு தினங்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.

அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்த ஒரே போட்டியில் கவனிக்கப்படும் வீரராக ஆனார்.

கடந்த ஐபிஎல் சீசனில் யாஷ் தயாள் குஜராத் அணிக்காக ஆடிய போது இதே போன்ற ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் கொடுத்து தோல்விக்குக் காரணமாக அமைந்தார். அதனால் அவரை குஜராத் அணி ஏலத்தில் விட்டது. அதனால் அவரை ஆர் சி பி அணி 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அப்போது யாஷ் தயாள் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன.

அதுகுறித்து இப்போது பேசியுள்ள யாஷ் தயாளின் தந்தை “என் மகனை ஆர் சி பி அணி எடுத்த போது பணத்தை சாக்கடையில் இறைக்கிறார்கள் என கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது என் மகனை பாராட்டி மெஸேஜ்கள் வருகின்றன.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.