1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (20:16 IST)

Worldcup T20 IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு! ப்ளேயிங் 11ல் யார் யார்?

India vs Pakistan
Worldcup T20 IND vs PAK: இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.உலக கோப்பை லீக் போட்டிகள் சுவாரஸ்யமாக நடந்து வரும் நிலையில் முதல் போட்டியிலேயே முத்திரை வெற்றி பெற்றது இந்தியா. பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கிற நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பும் பலமாக உள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ள நிலையில் இந்தியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா அணி : ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜாஸ்ப்ரிட் பும்ரா, அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ்

பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம், உஸ்மான் கான், ஃபகர் ஸமான், ஷதாப் கான், இஃப்திகர் அஹ்மத், இமாத் வாசிம், ஷஹீன் அப்ரிதி, ஹரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது அமீர்,

Edit by Prasanth.K