திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (12:03 IST)

சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளப்போவது யார்? – LSG vs GT அணிகள் இன்று மோதல்!

LSG vs GT
நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று மாலை நேர போட்டியில் லக்னோ அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.



நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகள் வரை விளையாடியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள் தெரிகின்றன. இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி, 7வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளுமே தலா 4 புள்ளிகளில் உள்ள நிலையில் இன்று வெற்றி பெறும் அணி மேலும் 2 புள்ளிகளை பெற்று சிஎஸ்கேவை கீழே இறக்கி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைய வாய்ப்புகள் உள்ளது. அதுபோல அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி அமைந்தால் இரண்டாவது இடத்திற்கு கூட முன்னேற முடியும்.


குஜராத் அணி 4க்கு 2 போட்டி வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங் பவுலிங் லைன் அப் நல்ல நிலையில் உள்ளது. லக்னோ அணி 3க்கு 2 வெற்றியுடன் நல்ல ஃபார்மில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளுக்கான இன்றைய போட்டி ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அணி இறங்கினாலும் ரன் இலக்கு 160-180க்குள் இருக்கும் என்றும், சேஸிங் கடினமானதாக த்ரில்லானதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K