ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 மே 2024 (09:40 IST)

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

Narendra Modi Stadium
ஐபிஎல் சீசனின் முதல் தகுதி சுற்று இன்று நடைபெற உள்ள நிலையில் மழை பெய்ய வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.



பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் சீசனின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த போட்டி இன்று மாலை 7 மணிக்கு குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போதைக்கு அப்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் மழை பெய்தால் போட்டி என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவாக லீக் போட்டிகளில் மழை குறுக்கிட்டால் போட்டியை நடத்த கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். ஆனால் இதுபோன்ற தகுதி சுற்றுகளுக்கு கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்படும். இந்த கூடுதல் மணி நேரத்தை பயன்படுத்தி போட்டியை நடத்தி முடிக்கலாம். மழை தொடர்ந்து பெய்து போட்டி ரத்தானால் ரிசர்வ் டேவில் மீண்டும் போட்டி நடைபெறும். அன்றும் மழை காரணமாக ரத்து செய்யப்படும் சூழல் உண்டானால் புள்ளி பட்டியல் அடிப்படையில் முன்னணியில் உள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.


இரு அணிகளும் சம அளவு ஸ்கோர் எடுத்து போட்டி டை ஆனால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவரிலும் டை ஆனால் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி அறிவிக்கப்படும். இது ப்ளே ஆப் மற்றும் இறுதி போட்டி அனைத்திற்குமே பொருந்தும்.

ஏற்கனவே லீக் சுற்றில் முக்கியமான சில போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் ப்ளே ஆப் சுற்றுகள் அப்படி கைவிடப்பட்டால் சுவாரஸ்யமே இருக்காது என்பதால் மழை குறுக்கிடக்கூடாது என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Edit by Prasanth.K