LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் பாடம் நடத்தக்கூடாது – அரசு உத்தரவு
கொரோனா லாக்டவுன் நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சில பள்ளிகள் முனைப்புடன் உள்ளனர். கொரொனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எல்கேஜி வகுப்புகளுக்கும் ஆன்லைன் வாயிலாகப் பாடம் நடத்துவதாகப் புகார் எழுந்தன. இதுகுறித்து கர்நாட மாநில அரசிடம் சிலர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள மனநல மருத்துவ மையமான நிம்ஹான்ஸ் அளித்த பரிந்துரையின்படி எல்.கே.ஜி மாணவர்கள் முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை ஆன்லைனில் வகுப்பு எடுக்கக் கூடாது என்றும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.