ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (19:01 IST)

312 இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்- இன்றாவது வெற்றிபெறுமா ஆப்கானிஸ்தான்?

இன்றைய உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக ஆடி 311 ரன்கள் எடுத்துள்ளது. 312 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் களம் இறங்கியுள்ளது.

டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்து சிறப்பாக ஆடியது. எவின் லெவிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் ஆளுக்கு ஒரு அரைசதம் வீழ்த்தி வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர். 200க்கு அதிகமான ரன்களில் இலக்கு இருந்தபோதே ஆப்கானிஸ்தான் வெற்றி பெறவில்லை. 312 என்பது ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்குதான். இதுவரை வெற்றிபெறாத ஆப்கானிஸ்தான் இந்த கடைசி ஆட்டத்திலாவது வெற்றி பெருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.