வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (13:22 IST)

இந்திய கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட அம்பத்தி ராயுடு!! ஓய்வை அறிவித்தார்...

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
ஆந்திராவை சேர்ந்த 33 வயதான இந்திய கிரிகெட் வீரர் அம்பத்தி ராயுடு உலகக் கோப்பை 2019-ல் இடம்பெறாத நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். 
 
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனை வெளிப்படையாக அவர் தெரிவித்தும் உள்ளார். 
இதனை தொடர்ந்து போட்டியின் போது காயம் காரணமாக ஷிகர் தவண் மற்றும் விஜய் சங்கர் விலகிய போதும் மாற்று வீரர் பட்டியலில் இருந்த அம்பத்தி ராயுடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 
 
இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கு சென்ற அம்பத்தி ராயுடுவுக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் படி அழைப்பு விடுத்திருந்தது. மேலும் அவருக்கு அந்நாட்டு நிரந்தர குடியுரிமை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. 
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், உலகக்கோப்பையில் இடம்பெறாத நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். 

33 வயதாகும் அம்பத்தி ராயுடு இதுவரை 55 ஒருநாள் போட்டியிலும் 6 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வந்தார் என்பது குறைப்பிடத்தக்கது.