தோனியின் கருத்தை புறக்கணித்த தேர்வுகுழு

Mahalakshmi| Last Updated: வெள்ளி, 24 ஜூலை 2015 (12:07 IST)
புதிய வேகப்பந்து வீந்துச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறிவந்த தோனியின் கருத்தை தேர்வுக்குழு புறக்கணித்துள்ளது. 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் பங்குபெறும் வீரர்களின் பட்டியலை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு நேற்று வெளியிட்டது.
 
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி வேகப்பந்து வீச்சில் சில மாற்றம் தேவை என கூறிவந்தார். மேலும் புதிய வேகப்பந்து வீந்துச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை அவ்வப்போது வலியுறித்தி வந்தார். எனினும் தோனியின் கருத்தை தேர்வு குழு சுத்தமாக புறக்கணித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். ஆம் அணியில் மீண்டும் 4 வேகப்பந்து வீச்சாளர்களே இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து சந்தீப் பட்டீல் கூறுகையில், பட்டியலில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களையே தேர்வு செய்துள்ளோம் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :