செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 2 ஜூலை 2025 (08:08 IST)

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்… உள்ளே வரும் இளம் வீரர்கள்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்… உள்ளே வரும் இளம் வீரர்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.

முதல் போட்டியில் இந்திய அணிக்கு தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது மோசமான ஃபீல்டிங்தான். அதிலும் ஸ்லிப் மற்றும் கல்லியில் நின்ற இளம் வீரர் ஜெய்ஸ்வால் நான்கு கேட்ச்களைக் கோட்டைவிட்டார். இதனால் இந்திய அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் நடக்கும் என தெரிகிறது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் அணியில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா  வெளியில் உட்காரவைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. பும்ரா விளையாடுவாரா  என்பதை இறுதி நேரத்தில்தான் முடிவு செய்வார்கள் என சொல்லப்படுகிறது.