1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:00 IST)

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தாமதமாக நடந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் மே மாதமே ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு அணி இடம்பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் ஏற்கனவே தங்களது அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களை வெளியேற்றியது என்பது தெரிந்ததே 
 
அதற்கு பதிலாக கூடுதலாக வீரர்களை எடுக்க ஏலம் விரைவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது 
 
இந்த தகவலின் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், எந்த அணிகள் எந்த வீரரை ஏலத்தில் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்