ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரோகித் சர்மா? – அதிர்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் ரோகித் சர்மா போட்டிகளில் விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். கடந்த சீசனில் மும்பை அணி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த சீசனில் கோப்பை வெல்லுமா என ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் சில ஆட்டங்கள் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தயாராக உள்ளதாகவும், அதனால் நடப்பு சீசனில் ஒரு சில போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா இல்லாத சமயங்களில் அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது அணியின் செயல்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என ரசிகர்களிடையே பீதி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K