1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (14:24 IST)

எனக்கும் ரோஹித்துக்கும் எந்த சண்டையும் இல்லை..! – விராட் கோலி விளக்கம்!

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் விராட் கோலி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்ட நிலையில் விராட் கோலி அணியில் இல்லை. நீண்ட காலமாக விராட் கோலிக்கும், ரோகித் ஷர்மாவுக்கும் இடையே மோதல் இருந்து வருவதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி “எனக்கும் ரோகித் ஷர்மாவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கூறி வருகிறேன். ரோகித் ஷர்மா தலைமையில் தென்னாப்பிரிக்க போட்டியில் விளையாட நான் தயார். ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க நான் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.