வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (14:56 IST)

மின்னல் வேகத்தில் ஓடிய கோலி… எதிரணி விக்கெட் கீப்பரே வியந்து பாராட்டு!

இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது இன்னொரு இறகை தன்னுடைய சாதனை கிரீடத்தில் பெற்றுள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அவரின் 500 ஆவது சர்வதேச போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 10 ஆவது கிரிக்கெட் வீரராக கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 87 ரன்கள் சேர்த்து களத்தில் இருக்கும் கோலி, அவரது இன்னிங்ஸில் வேகமாக ஓடி ரன்களை சேர்த்து வருகிறார். அப்படி ஒரு இரண்டு ரன்னுக்காக டைவ் அடித்த போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் “நீங்கள் இப்படி வேகமாக ஓடி ரன்களை திருடிக் கொண்டிருக்கிறீர்கள்.. அதுவும் 2012 ல் இருந்து” எனக் கூற, அதைக் கேட்டு கோலி சிரித்து அவரின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.