புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (16:03 IST)

10000 ரன்களைக் கடந்தார் ரன்மெஷின் கோலி –சச்சினைப் பின்னுக்கு தள்ளினார்

இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய 13 வது சர்வதேச வீரர் கோலி ஆவார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்குமே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடப்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் இதுவரை 12 பேர் மட்டுமே உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தற்போது 13 வது வீரராக இந்த சாதனையை இந்திய அணியின் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். இன்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த 2 வது ஒருநாள் போட்டியில் 81 ரன்களை சேர்த்ததன் மூலம் அவர் குறைவான இன்னிங்ஸ்களில் (205) இந்த சாதனையை நிகழ்த்திய என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

தற்போது முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை 259 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார். அவரையடுத்து குறைந்த இன்னிங்ஸில் அந்த சாதனையை செய்துள்ள வீரர்கள் கங்குலி-263, பாண்டிங்- 266, காலிஸ்-272, தோனி-273, லாரா-278, டிராவி-287, தில்சான் -293, சங்கக்ரா -296, இன்சமாம் உல் ஹக் -299, ஜெயசூர்யா -328, ஜெயவர்தனே-333. ஆகிய இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தற்போது அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விராட் கோலி 205 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி 10 ஆண்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.