திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:28 IST)

கர்மா திரும்பி அடித்தது: கங்குலி ராஜினாமாவை டிவிட்டரில் கொண்டாடும் கோலி ரசிகரக்ள்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த கங்குலி தற்போது அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்குலி இப்போது பதவி விலகியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் ரசிகர்கள் கங்குலியை ட்ரோல் செய்யும் விதமாக பதிவிட்டு வருகிறது.

முன்னதாக கோலி கேப்டன் பதவியில் நீடிக்க விடாமல் கங்குலி அரசியல் செய்து அவரை வெளியேற்றியதாகவும், அதனால்தான் இப்பொது கங்குலியும் அதே போல அரசியல் செய்து பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் சொல்லி ட்ரோல்கள் பரவி வருகின்றன.