1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ganguly talk about BCCI President selection

வாழ்நாள் முழுவதும் நிர்வாகியா இருக்க முடியுமா? – சூசகமாக சொன்ன கங்குலி!

Saurav Ganguly
பிசிசிஐ (BCCI) தலைவராக தான் தேர்வு செய்யப்படாதது குறித்து சவுரவ் கங்குலி சூசகமாக பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஒருபக்கம் கூறப்பட்டாலும், மற்றொரு பக்கம் அவர் பாஜக அரசியலுக்கு ஆதரவாக பேச மறுத்ததால் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்கப்படவில்லை என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள சவுரவ் கங்குலி “காலம் முழுவதும் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. அதுபோல வாழ்நாள் முழுவதும் நிர்வாகியாக இருக்க முடியாது. நிராகரிக்கப்படுவது வாழ்க்கையின் ஓர் அங்கம்” என சூசகமாக பேசியுள்ளார்.

Edited By: Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கர்மா திரும்பி அடித்தது: கங்குலி ராஜினாமாவை டிவிட்டரில் கொண்டாடும் கோலி ரசிகரக்ள்!