1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (08:54 IST)

கோலி& ரோஹித் அளித்த ஒரே பதில்… பிசிசிஐக்கு புதுக்கவலை!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் இந்திய டி 20 அணியில் எடுக்கப்படுவதில்லை. கடைசியாக அவர்கள் 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பையில் விளையாடினார்கள்.

கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் வயதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்று வீரர்களை தேடவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு உள்ளது. ஆனால் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் இதுபற்றி கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அந்த ஆலோசனையின் போது கோலி மற்றும் ரோஹித் இருவருமே தொடர்ந்து டி 20 கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் புது அணியைக் கட்டமைக்க விரும்பிய பிசிசிஐக்கு இப்போது புது பிரச்சனை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரை பொறுத்து உலகக் கோப்பை டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.