டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்: விராட் கோலி 9வது இடம்
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி 9வது இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிடுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேங்கள் தரவரிசைப் பட்டியலில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் 2 வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஸ்வீவன் ஸ்மித் 3 வது இடமும், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ஹிட்சேல் 4வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஹவாஜா 5வது இடமும், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம்6 வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த லபுசேஞ்ச் 7வது இடமும், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி புரூக் 8வது இடமும், இந்தியா அணியைச் சேர்ந்த விராட் கோலி 9வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஹெட் 10 வது இடமும் பிடித்துள்ளனர்.