திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (18:15 IST)

விராட் கோலி சின்ன வயசுல சல்மான் கான் மாதிரி இருந்தாரா?? ரசிகரின் விநோதமான ஒப்பீடு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது 16 வயது புகைப்படத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது 16 வயது புகைப்படத்துடன் தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ் அவரது ரசிகர்கள் பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே அவர் இளம் வயது புகைப்படத்தை குறித்து ஒருவர், “தேரே நாம்” திரைப்படத்தின் சல்மான் கான் போல் உள்ளீர்கள் என ஒருவர் கம்மெண்ட் செய்துள்ளார். ”தேரே நாம்” திரைப்படம் தமிழில் வெளிவந்த “சேது” திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.