திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (10:09 IST)

உலகக் கோப்பைக்கு பிறகு இவர்தான் கேப்டனாக செயல்பட வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக டி 20 அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு டி 20 அணியில் இப்போது இடமளிக்கப்படுவதில்லை. அதனால் அவர் அறிவிக்கப்படாத டி 20 நிரந்தர கேப்டனாகியுள்ளார். மேலும் விரைவில் அவர்தான் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஹர்திக்கால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் அணியின் டி 20 மற்றும் ஒருநாள் என வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை ஏற்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.