1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (07:41 IST)

ஹர்திக் பாண்ட்யாவை டெஸ்ட் அணியில் எடுக்க பிசிசிஐ ஆலோசனை…. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடிக்க வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பிய இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை எடுக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா, இதுவரை 11 டெஸ்ட்களில் விளையாடி 532 ரன்கள் சேர்த்துள்ளார். 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.