1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (10:21 IST)

டி 20 போட்டிகளில் மிகக்குறைந்த ஸ்கோர்… நெதர்லாந்தின் மோசமான சாதனையை சமன் செய்த உகாண்டா!

ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மற்றொரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் சார்லஸ் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் ஆடிய உகாண்டா அணி மளமளவென விக்கெட்களை இழந்து 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரே ஒரு வீரர் மட்டுமே 13 ரன்கள் சேர்த்து இரட்டை இலக்கத்தை எட்டினார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 11 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆடட்நாயகன் விருதைப் பெற்றார். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோரை அடித்திருந்த நெதர்லாந்தின் சாதனையை உகாண்டா அணி சமன் செய்துள்ளது.