தொடர்புடைய செய்திகள்
- 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.. நங்கூரமாக நிற்கும் டிராவிஸ் ஹெட்..!
- இந்தியா கூட்டணிக்கு தலைவர் ஆகிறாரா மம்தா பானர்ஜி.. பேட்டியில் பரபரப்பு தகவல்..!
- பும்ரா மாயாஜாலம் எடுபடவில்லையா? முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஸ்கோர்..!
- 180-க்கு ஆல் அவுட்டான இந்திய அணி! பும்ரா பதிலடி கொடுப்பாரா?
- இந்திய பேட்டிங்கை அச்சுறுத்தும் ஆஸி வேகப்பந்து வீச்சு கூட்டணி… மிட்செல் ஸ்டார்க் அபாரம்!
டிராவிஸ் ஹெட் அதரடி சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா… விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும் இந்திய பவுலர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் என்ற நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்தது.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அனியின் நடுவரிசை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார். 119 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து களத்தில் விளையாடி வருகிறார். அவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர்.
தற்போது வரை 5 விக்கெட்களை இழந்து 270 ரன்கள் சேர்த்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.