வியாழன், 15 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:23 IST)

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று TNPL இறுதிப் போட்டி… சிறப்பு விருந்தினராக டிராவிட்!

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று TNPL இறுதிப் போட்டி… சிறப்பு விருந்தினராக டிராவிட்!
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டிக்கு சிறப்பு விருந்தினரால இந்திய அணிக்கு டி 20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.