1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (14:07 IST)

மண் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியார் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி.....
 
கோவை மாவட்டத்தில் 30 ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது.பெரிய அளவிலான மழை வால்பாறை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது.கோடைகாலத்தில் குளங்கள் தூர்வாரியதால் மழைக்காலங்களில் பெரிதளவு  பாதிக்கப்படவில்லை.வால்பாறையில் மண் சரிவால் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. மழை தொடர்பாக தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் கொடுத்த வருகின்றனர்.வால்பாறையில் ஆய்வு மேற்கொண்டோம்.அதில்மண் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.வால்பாறை முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல அப்பகுதியில் புதிதாக கட்டப்படக்கூடிய கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்து அனுமதி கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம்.மாநில அளவிலான பேரிட மேலாண்மை குழுவை வயநாடு அனுப்பியுள்ளோம்.
 
அதேபோல் முன்னெச்சரிக்கையாக மேட்டுப்பாளையம், வால்பாறையில் இக்குழுவினர் உள்ளனர்.  மாவட்ட கண்காணிப்பாளராக நந்தகுமாரை நியமித்துள்ளனர்.தொடர்ந்து அவர் மழை தடுப்பு நடவடிக்கையில் கண்காணித்து வருகிறார்.அதே போல அபாயகரமான வீட்டில் தங்கக் கூடாது என தெரிவித்து வருகிறோம். 
 
மேலும் சுற்றுலா பயணிகள் நீர் நிலைகள் அதிகமாக இருக்கக்கூடிய இடத்திற்கு செல்லக்கூடாது, பாதுகாப்பாக இருக்க வேண்டுமென  அறிவுறுத்தி வருகிறோம் .
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் மேற்கு மலை தொடர்ச்சி பகுதியான வனப்பகுதியில் உள்ளன.அங்கு போலீசார் மற்றும் வனத்துறையினரை ரோந்து பணியில் ஈடுபட அறுவுறுதியுள்ளோம்.மேலும் கட்டுப்பட்டு அறை 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது.
 
எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொண்டாலும் அதற்கான நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.