1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (14:15 IST)

ரன்னே விட்டுக்கொடுக்காமல் விக்கெட்.. நியுசிலாந்து அணியின் டிம் சவுத்தி படைத்த அபார சாதனை

நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 172 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் நியுசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி 47 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியில் யாருமே படைக்காத ஒரு சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 5.2 ஓவர்கள் பந்துவீசிய சவுத்தி ரன்களே கொடுக்காமல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 1976ஆம் ஆண்டிற்கு பின் இதுவரை 47 ஆண்டுகளில் யாருமே இந்த சாதனையைப் படைத்ததில்லை. இதற்கு முன்னர் இரண்டு பவுலர்கள் மட்டுமே ரன்கள் கொடுக்காமல் விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பாபு நட்கர்னி 1962 ஆம் ஆண்டு இதே போல 6.1 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் மதன் லால் 4 ஓவர்கள் வீசி ரன்கள் கொடுக்காமல் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக இப்போது சவுத்தி இணைந்துள்ளார்.