1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (11:19 IST)

வன்மத்தை கக்கிட்டாங்க! நாய் ஓடியபோது ‘ஹர்திக்.. ஹர்திக்’ என கத்திய ஆடியன்ஸ்!

Hardik Pandya
மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் போட்டியின்போது நாய் ஓடியபோது ரசிகர்கள் ‘ஹர்திக் ஹர்திக்’ என கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.



ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று மாலை நேர போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்களை குவித்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய மும்பை அணி 162 ரன்களுடன் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா மீது மும்பை அணி ரசிகர்களுக்கே வெறுப்பு இருந்து வருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறித்துக் கொண்டதோடு நேற்று மைதானத்தில் அவர் ரோஹித் சர்மாவை நடத்திய விதம் மோசமானது என ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.


நேற்று போட்டியின்போது மைதானத்திற்குள் நாய் ஒன்று நுழைந்துவிட்ட நிலையில் அங்கிருந்த பணியாளர்கள் அதை விரட்ட முயன்றனர். அப்போது மைதானத்திற்குள் நாய் வேகமாக ஓடியபோது ரோஹித் சர்மா ஆதரவாளர்கள் பலரும் சத்தமாக ‘ஹர்திக்.. ஹர்திக்..’ என கத்தி கேலி செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளேயே இப்படி ஒரு பிரச்சினை நடந்து வருவது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K