வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (07:49 IST)

ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்ட குஜராத் ரசிகர்கள்… அப்படி என்ன சொன்னார்?

ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் வந்த ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். அவரின் அணிமாற்றத்தால் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இரு மாநில ரசிகர்களும் ஹர்திக் மேல் கோபமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு அவர் டாஸ் போட வந்த போது அவருக்கு எதிராக மைதான ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது ஹர்திக் பாண்ட்யா “நான் பிறந்தது குஜராத்தில்தான் என்றாலும், கிரிக்கெட்டில் நான் பிறந்தது மும்பையில்தான்” எனப் பேசினார். அவரின் இந்த பேச்சுக்குப் பிறகு மீண்டும் ரசிகர்கள் அவருக்கு எதிராக தொடர்ந்து கூச்சலிட தொடங்கினர்.