1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (13:32 IST)

’தல’ தோனிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடப்போகும் அந்த Tribute பாடல்!? ரசிகர்கள் கண் கலங்க போவது உறுதி!

A R Rahman Thala Dhoni
இன்று ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சியில் தோனிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை பாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.



ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இசை நிகழ்ச்சிகளோடு தொடங்குகிறது. சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் இடையே முதல் போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும் இது தோனிக்கு கடைசி ஐபிஎல் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

இதனால் தோனி ரசிகர்கள் இந்த ஐபிஎல் போட்டி தோனிக்கு சிறந்த Tribute ஆக அமைய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் தோனியை சிறப்பிக்கும் வகையில் அவருக்காக ஒரு பாடலை பாட உள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.


இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக அவர் அளித்த நேர்க்காணலில் “தோனிக்கு ஒரு பாடல் பாடுவதென்றால் நீங்கள் எந்த பாடலை பாடி Tribute செய்ய விரும்புவீர்கள்?” என்று கேட்டபோது, ஏ ஆர் ரஹ்மான் “உண்மையாகவே தோனிக்காக ஐபிஎல் மைதானத்தில் ஒரு பாடலை பாட இருக்கிறேன். பத்து தல படத்தில் வரும் ‘அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று’ பாடல் அவருக்காக பாட உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

தோனி ரசிகர்கள் பலரும் இந்த பாடலை வைத்து எடிட் செய்து அவ்வபோது தோனிக்கான வீடியோ ஸ்டேட்டஸ்களை தயாரிப்பது உண்டு. ஆனால் இன்று லைவ் ஸ்டேஜில் தோனிக்கு முன்னாலேயே தோனிக்காக அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடப்போகிறார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பாடலின் ஆழமான வரிகளுடன் தோனியை ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழப்போவது உறுதி என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K