1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Tendulkar's son named in IPL auction list

2021-ஐபிஎல் ஏலப்பட்டியலில் சச்சின் மகன் பெயர் !

Tendulkar's son
நடப்பாண்டில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சச்சின் மகன் அர்ஜூன் பெயர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக நவம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.

ஆனால் இவ்வாண்டு இந்தியாவில் 14 வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலங்களில் ஐபிஎல் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே உள்ள வீரர்களை தக்க வைக்கவும் நடராஜன் போன்ற திறமையானவர்களைக் கண்டெடுக்கவும் இந்த ஏலமுறை உதவும்.

இந்நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுகரின் பெயர் ஏலப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் ஏலத்திற்கு வரும் சச்சின் மகன்: மும்பை அணி கொக்கி போடுமா?