செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (18:40 IST)

டி-20 உலகக் கோப்பை; தென்னாப்பிரிக்க அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக  தென்னாப்பிரிக்க அணி விளையாடி  வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. இதில்,   20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து,  தென்னாப்பிரிக்க அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்மன்ஸ் 35 பந்துகளில் 16 ரன்களும்  , பூரன் 7 பந்துகளில்  12 ரன்களும் பொல்லார்ட் 20 பந்துகளில் 26 ரன்களும்  அடித்தனர்.