எனக்கு கோவப்பட வராது... வெற்றிக்கு பின் நடராஜன் கூல் பேட்டி!!
நேற்றைய போட்டிக்கு பின்னர் அவரிடம் எழுப்பிப்பட்ட கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்தார் நடராஜன்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை நடராஜன் கையில் வழங்கினார். இந்திய அணியின் முகமது சமி மற்றும் பும்ரா விளையாடாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினார்.
தனது அறிமுக போட்டியிலேயே அவரது அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது. அதாவது டி 20 தொடரில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டிக்கு பின்னர் அவரிடம் எழுப்பிப்பட்ட கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்தார் நடராஜன்.
முரளி கார்த்திக், விக்கெட் எடுத்தாலும் பவுண்ட்ரி போனாலும் இரே ரியாக்ஷன் அது எப்படி சாத்தியம் என கேட்டார். இதற்கு எனக்கு ஆக்ரோஷமாக இருக்க வராது, எதுவாக இருந்தாலும் இரு சிரிப்பு சிரித்தப்படி சென்றுவிடுவேன் என தெரிவித்தார்.