1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav will miss six weeks in international cricket

ஆறு வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல்… சூர்யகுமாரின் காயம் பற்றி வெளியான தகவல்!

விராட் கோலி
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்நிலையில் உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை அவர் தலைமையில் இந்தியா விளையாடியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது அவருக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இப்போது ஓய்வில் இருந்து வருகிறார். அவர் முழுவதுமாக குணமாக ஆறு வார காலம் ஆகும் என்பதால் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை இழக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர் என்பதால் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்புக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 17 ஆண்டுகளில் ஒரு தோல்வி கூட இல்லை..!