செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (10:43 IST)

பும்ரா இல்லாமலேயே இந்திய அணி விளையாட பழகவேண்டும்… ஆகாஷ் சோப்ரா கருத்து!

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக விளையாடவில்லை.

கடந்த சில மாதங்களாகவே காயம் காரணமாக அணியில் விளையாடவில்லை. இதையடுத்து முழு உடல்தகுதி பெற்ற அவர் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை தொடரில் அவர் விளையாடவில்லை என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 

இந்நிலையில் இந்திய அணிக்கு பூம்ரா இல்லாதது ஒரு குறைதான் என்றாலும், அவர் இல்லாமல் இந்திய அணி விளையாட பழகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் இந்திய அணியில் சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் குறைகள் இருந்தாலும், அவர்கள் சிறந்த பவுலர்களாக உருவாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.