1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (09:08 IST)

“சுனில் நரேன் வெஸ்ட் இண்டீஸுக்காக விளையாட விரும்ப வில்லையா?” வெளியான தகவல்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் நரேன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும் போது மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரைக் கூட இழந்தனர். இத்தனைக்கும் பல திறமையான வீரர்களை அந்த அணி கொண்டுள்ளது.

இந்நிலையில் இப்போது டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுனில் நரேன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக்குழுவினரில் ஒருவர் “சுனில் நரேன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவாரா என்றே எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.