தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் அணியின் ‘அந்த’ பலவீனத்த கவனியுங்க…. இந்திய அணிக்கு கம்பீர் அட்வைஸ்!
- ”மிஸ்டர் லோக்கல் பார்ட் 2… மதுரை முத்து காமெடிய பண்ணி வச்சிருக்காங்க…” பிரின்ஸ் பார்த்த ரசிகர்கள் புலம்பல்!
- “இப்பவே இறுதிப்போட்டி பத்தி நெனைக்க முடியாது…” கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து!
- ஒரே நாளில் 2,119 பேர் பாதிப்பு; 10 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!
- ”இந்திய அணியில் எலலாம் சரியாக இருந்தாலும், ஒரு பிரச்சன இருக்கு…” ஆஸீ முன்னாள் வீரர் கருத்து!
ஆஸ்திரேலியாவும், இந்த அணியும் பைனலுக்கு செல்லும்… கவாஸ்கர் கணிப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகள் மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று கவாஸ்கர் கணித்துள்ளார்.
உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் அரையிறுதிக்கு செல்லும் மூன்று அணிகள் என இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான்காவது அணியாக தென்னாப்பிரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “இந்த தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். ஆஸ்திரேலியா மற்றொரு அணியாக செல்லும். அங்கு தொடர் நடப்பதால், அவருக்கு கூடுதல் பலமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.