1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India Pakistan match gambhir advise

பாகிஸ்தான் அணியின் ‘அந்த’ பலவீனத்த கவனியுங்க…. இந்திய அணிக்கு கம்பீர் அட்வைஸ்!

இந்தியா
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது.

இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியோடு மோதும் போட்டி மிகவும் முக்கியமானது. அந்த போட்டியை வென்றால் மிகவும் தன்னம்பிக்கையோடு மற்ற அணிகளை எதிர்கொள்ளலாம்.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி சம்மந்தமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களின் பேட்டிங் பலவீனமாக உள்ளது. குறிப்பாக மிடில் ஆர்டர். அதனால் பாபர் ஆசாமை சீக்கிரம் வீழ்த்தி அவர்களின் பலவீனத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக ஷாட் பிட்ச் பந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆஸி மைதானங்களில் எல்லைக் கோடு கொஞ்சம் தூரம்” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியாவும், இந்த அணியும் பைனலுக்கு செல்லும்… கவாஸ்கர் கணிப்பு!